வாழைப்பூ கூட்டுக்கறி

வாழைப்பூ கூட்டுக்கறி 

இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 



சமர்ப்பணம் திருமதி
 கிருஷ்ணவேணி 

தேவையான பொருட்கள் 
வாழைப்பூ-1 கடலை பருப்பு – 1/2 கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
சின்ன வெங்காயம்      8
தக்காளி                         2
தாளிக்க
எண்ணெய்- 2 தேக்கரண்டி
                                                      கடுகு- 1 தேக்கரண்டி
                                                      வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
                                                      பச்சைமிளகாய் –4
                                                      கறிவேப்பிலை- 1 கொஞ்சம்
செய்முறை:
வாழைப்பூவைப் பொடியாக நறுக்கி (கருக்காமல் இருக்க) மோர் கலந்த நீரில்
      போட்டு வைக்கவும்.
    
அடுப்பை ஏற்றி ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் பொடியிட்டு வாழைப்பூவை     
         வேக  வைக்க வேண்டும்.
வாணலியில் தாளிக்கத் தேவையான பொருட்களைப் போட்டு கடுகு வெடித்ததும்
        பச்சைமிளகாய், ந று க்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம்                    மலர்ந்து பொன்னிரமானவுடன் இத்துடன் தக்காளி சேர்த்து குழைந்து வரும் வரை                வதக்கவும்
வேக வைத்த வாழைப்பூவை தாளித்தவற்றுடன் சேர்த்து வதக்கவும்.
கடலைப் பருப்பை நன்கு குக்கரில் வேகவைத்து  தாளிப்புடன் சேர்த்து கொள்ளவும்.

சுவையான வாழைக்காய் கூட்டுக்க்கறி தயார் 

No comments:

Post a Comment