சேப்பங்கிழங்கு வறுவல்




  • இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 


    சமர்ப்பணம் திருமதி
     கிருஷ்ணவேணி 

    தேவையான பொருட்கள் 
  • சேப்பங்கிழங்கு - கால் கிலோ 

  • வெங்காயம் - ஒன்று
  • இஞ்சி பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி 

  • கறிவேப்பிலை - ஒரு கொத்து 
  • பச்சை மிளகாய் - ஒன்று 

  • சாம்பார் பொடி - இரண்டு  தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - சிறிது 

  • கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி 

  • உப்பு - தேவைக்கேற்ப 
  • தாளிக்க:
  • கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

  • செய்முறை 
  • சேப்பை கிழங்கை வேகவைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை சூடாக்கி எண்ணை  ஊற்றி கடுகு சீரகம் உளுந்து தாளித்து கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கி  கொள்ளவும் அதில் வேகவைத்த சேப்பை  கிழங்கை போட்டு நன்கு வதக்கவும். இத்துடன் 

  • சாம்பார் பொடி - இரண்டு  தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிது கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி உப்பு  சேர்த்து நன்கு வதக்கவும் பொன்னிறமானவுடன் கறிவேப்பிலை தூவி இறக்கிடவும்      

No comments:

Post a Comment